பன்முகத்தன்மைக்கு இடங்கொடுத்தல்: யாரையும் தனித்து விடாதீர்கள் அல்லது பின்னால் விட்டுவிட வேண்டாம்

ஷிஹாரா மடுவகே (ஊடக மற்றும் தொடர்பாடல் அலுவலர், ஈக்வல் க்ரவுன்ட் EQUAL GROUND)

திருநர் ஒருவரின் “தோற்றம்” காரணமாக கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான மதுபானசாலையில் அவர் நுழைய மறுக்கப்படுவதைக் காட்டும் காணொளி  கடந்த வார இறுதியில் இலங்கை சமூக ஊடகங்களில் புயலாகப் பரவியது. காணொளியிலுள்ள பவுன்சர்களால் இந்த நபரின் தோற்றம் மிகவும் புண்படுத்தக்கூடியதாக இருக்கின்றது என்பதை சரியாகக் கூற முடியவில்லை, ஆனால் அந்தத் திருநரின் பாலின அடையாளத்துடன் அது சம்பந்தப்பட்டிருந்தது என்பது மட்டும் உட்பொருளாகவிருந்தது. பவுன்சர்கள் தாங்களாகவே செயல்படுகிறார்களா அல்லது நிர்வாகத்தால் அவ்வாறு செய்ய அறிவுறுத்தப்பட்டார்களா என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

அவர்களின் நற்பெயரைப் பாதுகாப்பதற்காக, நிர்வாகம் விரைவான நடவடிக்கைகளை எடுத்தது; காணொளி வெளியாகிய சில மணி நேரங்களிலேயே, அவர்கள் மன்னிப்பு கோரினர், சம்பவத்தில் தொடர்புடைய பவுன்சரை பணிநீக்கம் செய்தனர், மேலும் இலங்கையிலுள்ள ஓர்பாலீர்ப்பின பெண்கள் (லெஸ்பியன்), ஓர்பாலீர்ப்பின ஆண்கள் (Gay), இருபாலீர்ப்பினர்கள் (Bisexual), திருநங்கைகள் (Transgender), இடையிலிங்கத்தவர்கள் (Intersex) மற்றும் பால் புதுமையர்கள் (queer) (LGBTIQ) சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஊழியர்களுக்கு உணர்திறன் படிப்பினைகளை மேற்கொள்ள உறுதிமொழி உரைத்திருந்தனர்.  பின்னர், நிர்வாகம் பவுன்சரின் வேலை நிறுத்தலை மீளப்பெற்று, அதற்கு பதிலாக அவரை அவர்களின் கட்டாய உணர்திறன் கலந்துரையாடலில் சேர்க்க முடிவு செய்தது.

நிறுவனம் விரைவாக சர்ச்சைக்கு விடைக்கொடுத்த போதிலும் கூட, அவர்களில் குறைந்தபட்சம்  ஒரு பணியாட் தொகுதி உறுப்பினராவது அவர்களின் பாலியல் நாட்டம் மற்றும் பாலின அடையாளம் / வெளிப்பாடு (SOGIE) ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவருக்கு எதிராக பாகுபாடு காட்டியுள்ளார்  என்பது வெளியானதைத் தொடர்ந்து அதன் நற்பெயர் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, இது ஒரு தனியொருவரது சம்பவம் அல்ல, இலங்கையில் பல இடங்கள் – உணவகங்கள், கஃபேக்கள் அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களாக இருந்தாலும் சரி – இலங்கையில் அவர்களது பால்நிலை பற்றிக் கேள்விக்குட்பட்ட (LGBTIQ) நபர்களுக்கு களங்கம், துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு காட்டுதல் நடைபெறுகின்றன. நிறுவனங்களுக்குள் நுழைவதை மறுத்தல், தவறான பாலினம் பற்றிய தவறான புரிந்துணர்வு அல்லது தவறான பிரதிப்பெயர்களைப் பயன்படுத்துதல், கேவலமான கருத்துக்களைத் தூண்டுதல் போன்ற பிற நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் பொதுவானவையாகும்.

பன்முகத்தன்மைக்கு இடங்கொடுத்தல் (D&I) பற்றிய பயிற்சி ஏன் முக்கியமானது?

இத்தகைய சூழலில், இலங்கை வணிகங்கள், குறிப்பாக சேவைத் துறையில் உள்ளவர்கள்,  பன்முகத்தன்மைக்கு இடங்கொடுத்தல் பற்றி LGBTIQ சமூகத்தினரது பிரச்சினைகள் பற்றி அவர்களுக்கு உணர்த்துவது உள்ளடங்கலாக தொழில்தருநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சியளித்தலானது முன் எப்போதையும் விட இப்போது இது மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் வணிகங்கள், குறிப்பாக விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உள்ளவர்கள், கொவிட்-19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைத்து பயணிகள் விமானங்களும் கப்பல்களும் நிறுத்தப்பட்டதன் காரணமாக, இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருகை எதுவும் பதிவு செய்யப்படவில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணைக்குழுத் தகவல்கள் (SLTDA) தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, கடந்த வருடத்தின் அதே காலத்துடன் ஒப்பிடுகையில், 2020 சனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை பதிவான மொத்த வருகை 60% குறைந்துள்ளது. இதன் பொருள் குறிப்பாக மக்கள் தொகையில் கணிசமான பகுதியைக் கொண்டுள்ளதும் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பதுமான இலங்கையில் உள்ள  LGBTIQ சமூகம் உட்பட  வணிகங்கள் இனி யாருக்கும் பாகுபாடு காட்ட முடியாது.

பாலியல் நாட்டம் மற்றும் பாலின அடையாளம் / வெளிப்பாடு (SOGIE)  காரணமாக யாரிடமும் பாகுபாடு காண்பிப்பது ஒழுக்கமற்றது என்பதைத் தவிர, பன்முகத்தன்மைக்கு இடங்கொடுத்தல் (D&I) தொடர்பான பயிற்சியானது நிறுவனங்களுக்கு பல உறுதியான நன்மைகளை வழங்கக் கூடியதாயிருக்கிறது. பரவலாக, பணியிடத்தில் பன்முகத்தன்மைக்கு இடங்கொடுத்தல் (D&I) என்பது அவர்கள் நிறுவனத்தின் விழுமியங்களுடன் பொருந்துமாறு அவர்களின் பாத்திரங்களை நிறைவேற்ற முடியுமானவரையில், தனிநபர்களின் வயது, பாலினம், பாலியல், இனம், மதம், உடற் தகமைகள், மன ஆரோக்கியம், பின்னணிகள் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பணியிலமர்த்தல் வேண்டும் என்பதாகும். அது அவர்களுக்கு நியாயமாக ஊதியம் வழங்கப்பட வேண்டுமெனவும் கருதுகின்றது. சேவைத் துறையைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களை சமமாக நடத்துவதும், அவர்களின் மக்கள் தொகை பண்புகள் அல்லது SOGIE ஆகியவற்றின் அடிப்படையில் யாருக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்பதும் இதன் பொருளாகும்.

மைக்கேல் புல்லர்டனின் (பாங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச், லண்டன், இங்கிலாந்து) ஆராய்ச்சியின் படி,  LGBTIQ சமூகத்தினருடன் நட்புடன் இருப்பது என்பது வணிகங்களையும் ஊழியர்களையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறதாகும். குறிப்பாக நாம் இப்போது வாழும் காலத்தைப் போல நிச்சயமற்ற பொருளாதார காலங்களில் – உயர் ஊழியர்களின் வருவாய் நிலை உயரும். திறமையான உழைப்பைக் கண்டறிவது இலங்கையில் பல நிறுவனங்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாகும், மேலும் பணியிடத்தில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை நடைமுறைப்படுத்துவது வணிகங்களுக்கு அதிக ஊழியர் வருவாய் விலை தொடர்புடைய செலவுகளைத் தவிர்க்க உதவுகிறதாயிருக்கிறது.

பன்முகத்தன்மைக்கு இடங்கொடுத்தலைக் கொண்டிருப்பது, குறிப்பாக LGBTIQ -நட்புமிக்க, வணிகங்கள் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவிச் செய்யும். பெரியவர்களிடையே (வயது வந்தவர்களிடையே) ஒருமித்த ஒரே பாலின உறவுகள் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில் குற்றமாகக் கருதப்படுவதில்லை. உண்மையில், 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, இலங்கை உட்பட – 72 நாடுகள் மட்டுமே பெரியவர்களிடையே (வயது வந்தவர்களிடையே) ஒப்புதலுடனான ஒரே பாலின பாலியல் உறவை இன்னும் குற்றமாகக் கருதுகின்றன. இலங்கையின் சிறந்த சர்வதேச சுற்றுலா-உற்பத்தி சந்தைகளில் ஒன்றான இந்தியா, 2018 ஆம் ஆண்டில் ஒரே பாலின உறவுகளை குற்றவியளிலிருந்து நீக்கியது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சுற்றுலாப் பயணிகளை உருவாக்கும் பல சந்தைகள் LGBTIQ நபர்களுக்கு திருமணம் செய்வதற்கான சுதந்திரத்தை கூட வழங்கியுள்ளன. சுற்றுலாத்துறை இலங்கைக்கு மூன்றாவது பெரிய அந்நிய செலாவணி வருவாய் என்பதால், சுற்றுலாத்துறையிலிருந்து அதிகபட்ச நன்மைகளை இலங்கை பெற வேண்டுமானால், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் மற்றும் LGBTIQ சமூகத்தை உணர்ந்து கொள்வது மிக முக்கியமானதாகும்.

மேலும், சர்வதேச பாகுபாடற்ற தராதரங்களைக் கடைப்பிடிப்பது சர்வதேச சந்தைகளில் போட்டியிடுவதற்கு முக்கியமானதாகும், இது சுற்றுலாத் துறையில் உள்ள வணிகங்களுக்கு மட்டுமல்ல, பிற துறைகளுக்கும் முக்கியமானதாக உள்ளது.

சட்ட இடத்திற்கு வழிகாட்டுதல்

இலங்கையின் சட்ட முறையில் காலனித்துவ உணர்வுகளின் காரணமாக, பெரியவர்களிடையேயான  (வயது வந்தவர்களிடையேயான) ஒப்புதலுடன் கூடிய ஒரே பாலின பாலியல் உறவுகள், தண்டனைச் சட்டத்தில் பிரிவு 365 மற்றும் 365 அ ஆகியவற்றால் குற்றமாக்கப்படுகின்றன.  இது இயற்கையின் ஒழுங்கு மற்றும் மொத்த அநாகரீக செயல்களுக்கு எதிரான சரீர உடலுறவு சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்களாகும் என்று கூறுகிறது.

மேலும், ஆள்மாறாட்டம் மூலம் மோசடி செய்வது தொடர்பான சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 399 ஆகியவை இலங்கையில் உள்ள LGBTIQ சமூகத்திற்கு எதிராகவும், குறிப்பாக திருநர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், “மொத்த அநாகரீக செயல்கள்” மற்றும் “இயற்கைக்கு மாறான சரீர உடலுறவு” ஆகியவை குற்றமயமாக்கப்பட்டாலும், தொழில்நுட்ப ரீதியாக, மாறுபட்ட பாலியல் நாட்டங்கள் மற்றும் பாலின அடையாளங்கள், பாலின வெளிப்பாடுகள் ஆகியன சட்டவிரோதமானது அல்ல என்பதாகும். இலங்கை அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் பற்றிய உறுப்புரை 12 (2) இன் கீழ் பாகுபாடு காட்டாமை என்பதனை உள்ளடக்கியதாகும். இது “இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து மற்றும் பிறந்த இடம், அத்தகைய அடிப்படையில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் எந்தவொரு குடிமகனுக்கும் பாகுபாடு காட்டப்படலாகாது என்றே  கூறுகின்றது. குறைந்த பட்சம் இரண்டு சந்தர்ப்பங்களில், இந்த  அரசியலமைப்பு ஏற்பாட்டின் பிரகாரம் LGBTIQ நபர்கள் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும் பாலியல் நாட்டம் மற்றும் பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு (SOGIE)  என்பன அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்று இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் முன் உறுதியளித்துள்ளது.  உண்மையில், 2016 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால், பதிவாளர் நாயகத் திணைக்களமும் சுகாதார அமைச்சும் இணைந்து பிறப்பின் போது தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாலினத்தை திருத்த விரும்பும் திருநர்களுக்கு பாலின அங்கீகார சான்றிதழ்களை (G.R.C.) உத்தியோகபூர்வ ஆவணங்களுக்காக வழங்குவதற்காக இரண்டு சுற்றறிக்கைகளை வெளியிட்டன.

இந்த சட்டபூர்வமான இடவமைவு என்னவென்றால், வணிகங்கள் தங்கள் பாலியல் நாட்டம் மற்றும் பாலின அடையாளம் / வெளிப்பாடு (SOGIE)  அடிப்படையில் யாருக்கும் பாகுபாடு காட்ட வேண்டிய எந்த வித அவசியமும் இல்லை என்பதாகும்.

இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், மாறிவரும் உலகளாவிய போக்குகள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் சமூக முன்னேற்றங்களுடன், இலங்கையில் செயல்படும் நிறுவனங்களுக்கு – அவை உள்ளூர் அல்லது வெளிநாட்டினராக இருந்தாலும் – களங்கம், துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் / அல்லது LGBTIQ சமூகம் உட்பட ஓரங்கட்டப்பட்ட குழுக்களுக்கு எதிராக பாகுபாடு காண்பித்தல் மிகவும் கடினமானதாக மாறி வருகின்றது. தெரிவு மிகவும் எளிதானது: பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தைக் கடைப்பிடித்து, ஒன்றாக முன்னால் செல்லுங்கள் அல்லது இனிமேலும் ஏற்றுக்கொள்ள முடியாத தொன்மையான நடைமுறைக் கொள்கைகளை விட்டு விடுங்கள்.

ஈக்வல் க்ரவுன்ட் (EQUAL GROUND)  ஆனது இலங்கையில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் தொடர்பான பயிற்சி மற்றும் உணர்வூட்டல் நிகழ்ச்சிகளை நடாத்தும் ஒரே LGBTIQ நிறுவனமாகும். தொடர்புகொள்ளவும்:   media@equalgroundsrilanka.com / +94114334279.

Leave a comment

No comments yet.

Comments RSS TrackBack Identifier URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s